கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு மனு


கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு மனு
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:15:16+05:30)

தென்காசி கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு மனு கொடுத்தனர்.

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், செயலாளர் பூமிநாத், பொருளாளர் முகம்மது உசேன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழாம்பூர் மாரிசுப்பு, மடத்தூர் முத்தமிழ்செல்வி ரஞ்சித் ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில் திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை செல்லும் இணைப்பு சாலையை நபார்டு திட்டத்தின் கீழ் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Next Story