பொதுசேவை அமைப்பின் கூட்டமைப்பு கூட்டம்
சங்கராபுரத்தில் பொதுசேவை அமைப்பின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அனைத்து பொதுசேவை அமைப்புகளின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், பொருளாளர் ரவி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தலைவர் கலியமூர்த்தி, பொது சேவை தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கராபுரம் தாலுகாவில் இருந்த வடபொன்பரப்பி குறுவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட வாணாபுரம் தாலுகாவில் சேர்த்ததை தவிர்த்து, அதனை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் சேர்க்க வேண்டிய அவசியம் பற்றியும், அதற்காக போராட்டக்குழு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வடபொன்பரப்பி குறுவட்டத்தை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவில் இணைக்கக்கோரி வருவாய்த்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை தனித்தனியாக பதிவு தபால் மூலம் அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் மகேந்திரன், வேலு, நெடுஞ்செழியன், ஏழுமலை, நூர்தீன், விஜயகுமார், ரவி, சக்கரவர்த்தி, பிரகாசம், செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.