வெப்ப அயற்சி காரணமாககோழிகளில் தீவன எடுப்பு குறையும்


வெப்ப அயற்சி காரணமாககோழிகளில் தீவன எடுப்பு குறையும்
x

வெப்ப அயற்சி காரணமாக கோழிகளில் தீவன எடுப்பு குறையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 6 கி.மீ., 6 கி.மீ., 4 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கோடை மற்றும் தீவன பற்றாக்குறை நிலவும் காலங்களில் பருத்தி ஆலையில் இருந்து கிடைக்கும் கழிவு பஞ்சை அசைபோடும் விலங்குகளுக்கு உலர் தீவனங்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

வெப்ப அயற்சி

மேலும் கோடை காலம் தொடங்க இருப்பதால் பகல் மற்றும் இரவு வெப்ப நிலைகளில் மாற்றம் காணப்படுகிறது. இதனால் முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு வெப்ப அயற்சி காரணமாக குறையும். மேலும் வெப்ப அயற்சி காரணமாக கோழிகள் இறக்க நேரிடும்.

ஆரம்ப கால கோடையை சமாளிக்கவும், வெப்ப தாக்கத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்கவும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை தீவனம் அளிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story