திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வங்கி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வங்கி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வங்கி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு. இவருடைய மகள் கனகப்பிரியா (வயது 23). இவர், செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இருவீட்டு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்டு மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு மேலும் கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கனகப்பிரியா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய கனகப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story