மார்க்கண்டேயன் ஆற்றங்கரையோரம் பெண் பிணம்


மார்க்கண்டேயன் ஆற்றங்கரையோரம் பெண் பிணம்
x

குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் மார்க்கண்டேயன் ஆற்றங்கரையோரம் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் மார்க்கண்டேயன் ஆற்றங்கரையோரம் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story