பெண் டாக்டரின் கார் கண்ணாடி உடைப்பு


பெண் டாக்டரின் கார் கண்ணாடி உடைப்பு
x

பெண் டாக்டரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி:

திருச்சி செல்வநகர் பகுதியை சேர்ந்த கவுரி சங்கரின் மனைவி டாக்டர் இவ்பாஷினி(வயது 35). இவர் தனது காரை வீட்டின் அருகில் நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த கணேசன் (57) அந்த காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதுபற்றி தகவல் அறிந்த செசன்சு கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கணேசன் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story