நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் -போலீஸ் சூப்பிரண்டு


நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் -போலீஸ் சூப்பிரண்டு
x

நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் என போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் என போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.

வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், பழனி, கல்லூரி ஆலோசகர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எம்.ரேணு வரவேற்று பேசினார்.

இதில் மாவட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா, வாணியம்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி, ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி, கருணை இல்லம் இயக்குனர் டேவிட் சுபாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம், பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுகவும். போலீசார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். ஆபத்தான நேரத்தில் 100, 1098, 1091 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். எந்த நேரத்திலும் போலீசார் உங்களை அணுகி நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

தொடர்ந்து மாணவிகளின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை சுதா நன்றி கூறினார்.


Next Story