கோவை துடியலூர் அருகே பெண் யானை உயிரிப்பு..!
கோவையில் துடியலூர் அருகே காப்புக் காட்டில் பெண் யானை உயிரிழந்தது.
கோவை,
கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைகட்டி மத்திய சுற்றுக்குட்பட்ட தூமனூர் பகுதியில் ஆனைகட்டி தெற்கு காப்பு காட்டிற்கு வெளியே 300 மீட்டர் தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடைந்தது. களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது இதனை கண்டறிந்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து இன்று (திங்கள்கிழமை) கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலர்களால் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையின் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story