போலி நகைகளை அடகு வைத்த பெண் ஊழியர் கைது


போலி நகைகளை அடகு வைத்த பெண் ஊழியர் கைது
x

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.40¾ லட்சம் மோசடி செய்தபெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை குனியமுத்தூரில் ஐ.சி.எல். பின்கார்ப் நிதி நிறுவன மேலாளர் ஜே.வினோத்குமார் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், நிதி நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது 597.34 கிராம் போலி தங்கநகைகள் அடகு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் உதவி மேலாளர் சத்யா, கிளை அதிகாரி கார்த்திகா, ஊழியர் சரவணக்குமார் ஆகியோர், நிதி நிறுவன கணக்குதாரர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி தங்க நகைகளை அடகு வைத்து, ரூ.40 லட்சத்து 80 ஆயிரத்து 900-ஐ மோசடி செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக உதவி மேலாளர் சத்யா கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் கிளை அதிகாரி கார்த்திகா (வயது31) நேற்று கைது செய்யப்பட்டார்.

இவர் ஒத்தக்கால்மண்டபம் பிரிமியர் மில்ஸ் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ஆவார். கார்த்திகா மீது கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

1 More update

Next Story