இ-சேவை மைய பெண் ஊழியர் சாவு


இ-சேவை மைய பெண் ஊழியர் சாவு
x
தினத்தந்தி 21 Jun 2023 4:00 AM IST (Updated: 21 Jun 2023 3:31 PM IST)
t-max-icont-min-icon

மருந்தை மாற்றி குடித்ததால் இ-சேவை மைய பெண் ஊழியர் இறந்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பால் திரேசன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (வயது 35). இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சரண்யாவுக்கு உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்ததால் சிகிச்சை எடுத்து, அதற்காக ஆயுர்வேத மருந்து தினமும் உட்கொண்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மருந்து என நினைத்து மூட்டு வலிக்கான தைலத்தை சரண்யா தெரியாமல் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சரண்யா இறந்தார். இதுகுறித்து ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்தை மாற்றி குடித்ததால் பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story