தனியார் பள்ளி பெண் ஊழியர் மர்மசாவு
தனியார் பள்ளி பெண் ஊழியர் மர்மசாவு
மயிலாடுதுறை தாலுகா மண்ணிப்பள்ளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி கிரிஜா (வயது45). இவர் செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் காலை கிரிஜா பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர் கிரிஜா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் கிரிஜாவின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். அதில், கிரிஜாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது இறப்பு குறித்து சரியாக தகவல் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் கிரிஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் கிரிஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கிரிஜா உடலை வாங்கி செல்வோம் என கூறினர்.