பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கடையூரில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டை சேர்ந்த செல்லத்துரை மகள் கனகலட்சுமி (வயது29) பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (29) என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் 2018-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட கனகலட்சுமி தந்தை வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தந்தை வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்புறத்தில் உள்ள உத்தரத்தில் கனகலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்லத்துரை பொறையாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கனகலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளதால் சீர்காழி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.