பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காரையூர் அருகே மாப்பிள்ளை பிடிக்காததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

பட்டதாரி

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே மதியாணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கங்கா (வயது 25). பி.ஏ.பட்டதாரி. தற்போது கொப்பனாபட்டி தனியார் இ-சேவை மையத்தில் 3 மாதங்களாக வேலைபார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சுப்பிரமணியன் நாகப்பட்டினத்தில் மீன் பிடிக்கும் வேலை பார்த்து வருகிறார். கங்காவின் தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மதியாணியில் உள்ள அத்தை வீட்டில் கங்கா வசித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில் கங்காவிற்கு, அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி முடித்துள்ளனர். பின்னர் திருமண தேதி குறிப்பதற்காக உறவினர்கள் பொன்னமராவதியில் உள்ள ஜோதிடரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது கங்கா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், மாப்பிள்ளை பிடிக்காததால் ஓட்டு வீட்டில் உத்திரத்தில் சேலையில் தூக்குப்போட்டு கங்கா தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கங்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story