பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு - மாயமான ஆவணங்களின் நகல்கள் கோர்ட்டில் தாக்கல்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு - மாயமான ஆவணங்களின் நகல்கள் கோர்ட்டில் தாக்கல்
x

மாயமான ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.

விழுப்புரம்,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி. போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி மாயமான ஆவணங்களின் நகல்களை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான ஜெய்சங்கர், ராமநாதன், ராஜேந்திரன், சரவணன் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி புஷ்பராணி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story