பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர்

கடலூர் அடுத்த திருமாணிக்குழியை சேர்ந்தவர் தேவநாதன் மனைவி தமிழரசி (வயது 40). இவர் சம்பவத்தன்று அரளி விதையை அரைத்து தின்றுவிட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story