தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

விழுப்புரத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி ரேவதி (வயது 25). இந்நிலையில் ரேவதியின் மாமனார் மணிகண்டன் இறந்து 30-ம் நாள் துக்க நாளின்போது உறவினர்களுக்கு சரியாக உணவு பரிமாறவில்லை என்று ரேவதியை அவரது கணவர் லட்சுமணன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேவதி, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ரேவதி இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story