கோட்டாரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


கோட்டாரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

கோட்டாரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலைசெய்து கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி இந்திரா (வயது 58). கடந்த சில ஆண்டுகளாக இந்திரா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு வலிப்பு நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இந்திரா நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இந்திராவின் மகன் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-**

1 More update

Next Story