பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைகல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஹேமலதா (27). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருண்குமார் வீட்டில் இருந்தார். அப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ஹேமலதா, கணவரிடம் மெடிக்கல்லுக்கு சென்று மாத்திரை வாங்கி வருமாறு கூறி அனுப்பிவிட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த ஹேமலதா மின்விசிறி மாட்டு்ம் கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார். வீட்டுக்கு வந்த அருண்குமார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஹேமலதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story