பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சிங்கசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்பகதூர். இவரது மகன் விக்ரம் சிங் (வயது 33) இவருக்கு திருமணமாகி லட்சுமி என்கிற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். விக்ரம் சிங் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள கிட்டபையனூர் பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் நிலத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவலாளியாக பணியில் சேர்ந்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் லட்சுமி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதால் கணவர் போதிய வருமானம் இல்லாததால் தன்னை காப்பாற்ற மிகவும் அவதிப்படுவார் என நினைத்து தான் குடியிருந்த வீட்டிலேயே லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கணவர் விக்ரம் சிங் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.