பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

வந்தவாசி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் காவேடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்முருகன் (வயது 28), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் இசாந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமுதாவின் தந்தை ஏகாம்பரம் கீழ்க்கொடுங்காலூர் போலீசில் அளித்துள்ள புகாரில், அமுதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருமணமான 2 ஆண்டுகளில் அமுதா இறந்துள்ளதால், செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story