பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண்  தூக்குப்போட்டு தற்கொலை
x

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கழனி கிராமத்தில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கவுரி (வயது 31), இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். அவரை மீட்ட உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே கவுரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதனையடுத்து உயிரிழந்த கவுரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story