ஈத்தாமொழி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலைகணவர் போனை எடுத்து பேசாததால் விபரீதம்


ஈத்தாமொழி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலைகணவர் போனை எடுத்து பேசாததால் விபரீதம்
x
தினத்தந்தி 10 April 2023 6:45 PM GMT (Updated: 10 April 2023 6:46 PM GMT)

ஈத்தாமொழி அருகே கணவர் போனை எடுத்து பேசாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ஈத்தாமொழி:

ஈத்தாமொழி அருகே கணவர் போனை எடுத்து பேசாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொலைக்காட்சி உரிமையாளர் மனைவி

ஈத்தாமொழி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வடக்கு சூரங்குடி வத்தக்காவிளையைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது38). இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு லதா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். லதா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென லதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் கணவர் சுயம்புலிங்கத்திற்கு போன் செய்துள்ளார். ஆனால், சுயம்புலிங்கம் போனை எடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சுயம்புலிங்கம் லதாவுக்கு போன் செய்தபோது, அவர் எடுக்கவில்லை. இதையடுத்து தனது உறவினர் ஒருவரை வீட்டுக்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டு இருந்தது.

இதனால், சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, படுக்கை அறையில் லதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது லதா ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீசார் விரைந்து வந்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story