தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

அம்பையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி தங்கராணி (வயது 42). நேற்று காலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கராணி, வீட்டின் உள் அறையில் தாழிட்டு மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் அம்பை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story