துப்புரவு பணி பெண் மேற்பார்வையாளர் தற்கொலை


துப்புரவு பணி பெண் மேற்பார்வையாளர் தற்கொலை
x

சேலம் அரசு ஆஸ்பத்திரி துப்புரவு பணி பெண் மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் அம்மாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராணி. இவர்களது மகள் பார்கவி (வயது 19). இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அவருக்கு கீழ் வேலைபார்க்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பார்கவி தனது தாயார் ராணியிடம் தெரிவித்தார். இதனை கேட்ட அவரது தாயார் வேலை பார்க்கும் இடத்தில் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் என அறிவுரை கூறி வந்துள்ளார். இந்த நிலையில் பார்கவி நேற்று முன்தினம் இரவு வீட்டின் குளியலறையில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதனிடையே வீட்டுக்கு வந்த அவருடைய அண்ணன் பூபதி, பார்கவி தூக்குப்போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்கவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story