பெண் கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைப்பு


பெண் கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைப்பு
x

பட்டா மாறுதலுக்கு ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். தொழிலதிபரான இவர் கல்வி நிறுவனம், மருத்துவமனை உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இவர் தஞ்சை அருகே குருவாடிப்பட்டியிலுள்ள மூன்று நிலஅளவை எண்களிலுள்ள 4.50 ஏக்கர் நிலங்களை தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக தஞ்சை வட்ட அலுவலகத்துக்கு இணையவழி மூலம் கடந்த 3-ந் தேதி விண்ணப்பம் செய்தார்.

ஒவ்வொரு நிலவை அளவை எண்ணுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என க இளங்கோவன் நிறுவன மேலாளர் அந்தோணி யாகப்பாவிடம், கிராம நிர்வாக அலுவலர் வீரலட்சுமி கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி யாகப்பா தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில் தஞ்சை தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்ற அந்தோணி யாகப்பாவிடமிருந்து, வீரலட்சுமி ரூ.10 ஆயிரம் வாங்கினார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக வீரலட்சுமி கைது செய்தனர். பின்னர் விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து வீரலட்சுமியை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார். பின்னர் அவரை போலீசார் திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். முன்னதாக தஞ்சையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.


Next Story