பழைய தர்மபுரியில்குழந்தை முனியப்ப சாமி கோவில் வருஷாபிஷேக விழா ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


பழைய தர்மபுரியில்குழந்தை முனியப்ப சாமி கோவில் வருஷாபிஷேக விழா ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 17 July 2023 1:00 AM IST (Updated: 17 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரையில் உள்ள குழந்தை முனியப்ப சாமி கோவில் வருஷாபிஷேக விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவன்-பார்வதி மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் பழைய கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு, மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டும், குழந்தைகளின் எடைக்கு எடை நாணயங்கள் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story