தர்மபுரியில் நாளைசுதந்திர தின விழா கொண்டாட்டம்கலெக்டர் சாந்தி தேசியக்கொடி ஏற்றுகிறார்


தர்மபுரியில் நாளைசுதந்திர தின விழா கொண்டாட்டம்கலெக்டர் சாந்தி தேசியக்கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றுகிறார்.

சுதந்திர தின விழா

இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா சுதந்திர தினவிழா நடைபெற உள்ளது. காலை 9.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இந்த விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலை வகிக்கிறார்.

தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொள்கிறார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் தற்காப்பு கலை பயிற்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக பந்தல் மற்றும் அலங்கார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுதந்திர போராட்ட தினத்தை முன்னிட்டு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதேபோன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story