பாப்பிரெட்டிப்பட்டியில் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழா
பாப்பிரெட்டிப்பட்டியில் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழா நடைபெற்றது.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழா நடைபெற்றது. வாடிப்பட்டி அருட்தந்தை அமலநாதன், சென்னை நியூ பிரிஸ்ட் பொதுச்செயலாளர் அருளப்பா ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நவநாள் திருப்பலி ஆராதனைகள் நடந்தது. இதில் அருட்பணி ஜேம்ஸ், ஜஸ்டின் திரவியம், தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தினர். பின்னர் அன்னை வேளாங்கண்ணி ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதை பாதிரியார் ரூபன் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி சென்றது. இதில் பங்குதந்தைகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான்பீட்டர் செய்திருந்தார்.
Related Tags :
Next Story