தூய பாத்திமா அன்னை ஆலய தேர்திருவிழா


தூய பாத்திமா அன்னை ஆலய தேர்திருவிழா
x

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய தேர்திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தின், 49-வது ஆண்டு திருத்தல தேர்திருவிழா கடந்த 2-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பங்கு தந்தைகள் தலைமையில், திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நடைபெற்று வந்தன. தொடர்ந்து, மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி வந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் தர்மபுரி மறைமாவட்ட முதன்மை குரு அருள்ராஜ் தலைமையில், ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை, காவேரிப்பட்டணம் பங்குத்தந்தை இருதயம் மந்தரித்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் தேர் வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story