மாரியம்மன்-காளியம்மன் கோவில் திருவிழா


மாரியம்மன்-காளியம்மன் கோவில் திருவிழா
x

பாலக்கோடு அருகே மாரியம்மன்-காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே காட்டம்பட்டியில் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story