வீரபத்திர சாமி கோவில் ஆடி திருவிழா


வீரபத்திர சாமி கோவில் ஆடி திருவிழா
x

திப்பிரெட்டிஅள்ளியில் வீரபத்திர சாமி கோவில் ஆடி திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி அருகே திப்பிரெட்டிஅள்ளி கிராமத்தில் வீரபத்திர சாமி கோவில் ஆடி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான குருமன்ஸ் மக்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story