தூய ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா


தூய ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா
x

தூய ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகில் ஆண்டிச்சி ஊரணி விலக்கு ரோட்டில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை கெபியில் அன்னையின் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 30-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நவநாள் திருப்பலி நடந்தது. கடைசி நாளான நேற்று காலை 9 மணிக்கு ஆண்டிச்சி ஊரணி புனித அடைக்கல மாதா ஆலயத்தில் இருந்து ஆரோக்கிய அன்னையின் உருவம் தாங்கிய சப்பரப்பவனி புறப்பட்டு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள மாதா கெபிக்கு வந்தடைந்தது.

அப்போது ராமநாதபுரம் மறைவட்ட அதிபர் அருள்தந்தை அருள்ஆனந்த் தலைமையில், ஆண்டிச்சி ஊரணி பங்குத்தந்தை தைரியம் மற்றும் ஏராளமான அருள்தந்தையர்கள் இணைந்து திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.Next Story