தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தேவகோட்டை  ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கியது

தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் கொடியேற்றம் தொடங்கியது. மாலை தோளுக்கிக்கினியான் அலங்காரத்தில் பெருமாள் தேவியர்களுடன் காட்சியளித்தார். விழாவையொட்டி தினந்தோறும் பெருமாள் சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

தேரோட்டம்

வருகிற 15-ந்தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். 18-ந்தேதி மாலையில் வெண்ணை தாழி சேவையில் காட்சியளிக்கிறார். 19-ந்தேதி மாலை தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 20-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு மற்றும் கள்ளழகர் சேவையில் காட்சியளிக்கிறார். மறுநாள் உத்சவ சாந்தி திருமஞ்சனத்தில் காட்சிளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மேனேஜிங் டிரஸ்டி சண்முகம் செட்டியார் செய்து வருகிறார்.


Next Story