பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் குயிலமுதாம்பிகை சமேத திருக்கொடுங்குன்றநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவாச்சாரியார் உமாபதி தலைமையில், பேஸ்கர் கேசவன் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காட்டப்பட்டது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபோகத்தை முன்னிட்டு சுவாமிகள் 12 கால் கல்மண்டபத்தில் எழுந்தருளினர். 7 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு மங்கல நாண் சூட்டப்பட்டது.

இந்த திருக்கல்யாணம் அருவியூர் தெற்குவளவு நகராத்தார் சார்பில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன்பின்னர் பக்தர்கள் சுவாமிக்கு மொய் எழுதினர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தேரோட்டம்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) வள்ளல் பாரி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து 9-ம் நாள் திருவிழாவான 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பத்தாம் திருவிழாவான 3-ந் தேதி தேனாடி மதுபுட் கரணியில் தீர்த்தம், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்தானம் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பிரான்மலை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story