திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
குன்றக்குடி தேவஸ்தானத்தை சேர்ந்த திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 6 மணியளவில் கலச அபிஷேக பூஜையும், யாகவேள்வியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்பு சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டது.
தேரோட்டம்
இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில், பாஸ்கர குருக்கள், ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை செய்தனர்.
தொடர்ந்து முதல்நாள் விழாவாக திருப்பத்தூர் நாயுடு மகாசன சங்கம் சார்பில் மண்டகப்படியில் இரவு சூரியபிறை சந்திரபிறை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 9-ம் நாள் தேரோட்டமும், 10-ம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.