கன்னிமார் சாமி , மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மூலனூர் அருகே உள்ள சின்னக்காம்பட்டியில் கன்னிமார் சாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மூலனூர் அருகே உள்ள சின்னக்காம்பட்டியில் கன்னிமார் சாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
மூலனூர் அருகே வெள்ளவாய்ப்புதூர் கிராமம் சின்னக்காம்பட்டியில் கணபதி, கன்னிமார் சுவாமி, மாரியம்மன், கருப்பணசுவாமி கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கனபதி பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி, ரக்சாபந்தனம், கும்ப லங்காரம், யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக வேதிகார்ச்சனை, அக்னி காரியம் மூல மந்திர ஹோமம் தொடங்கியது. மாலையில் முதற்கால பூஜை மூர்த்தி, பூர்ணாகுதி, தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு யாக பூஜை ஆரம்பமானது. இதில் சூரிய பூஜை, வேதிகார்சனை, மூல மந்திரம், ஹோமம் நாடி சந்தானம் நடந்தது. பின்னர் யாத்ரானம் கரகம் புறப்பாடு செய்து காவிரி, அமராவதி உள்ளிட்ட ஏழு புண்ணிய நதி தீர்த்தங்களை கொண்டு மகாகணபதி, கன்னிமார் சுவாமி, மாரியம்மன், கருப்பண சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மகாதீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாமி தரிசனம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சின்னக்காம்பட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.