அம்மாபேட்டை அருகே தன்னாசி முனியப்பன் கோவிலில் திருவிழா


அம்மாபேட்டை அருகே தன்னாசி முனியப்பன் கோவிலில் திருவிழா
x

அம்மாபேட்டை அருகே தன்னாசி முனியப்பன் கோவிலில் திருவிழா

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே மொண்டிபாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த தன்னாசிமுனியப்பன் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்குக்கு மறுநாள் இந்த கோவில் திருவிழா நடைபெறும். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.

நேற்று காலை காவிாி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. பின்னர் தன்னாசி முனியப்பன் மற்றும் பாிவார தெய்வங்களுக்கு பால், இளநீா், வெண்ணெய், திருமஞ்சனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் பட்டாடை அணிவித்து நந்தா தீபம் ஏற்றி கற்பூர ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தா்கள் பொங்கல் வைத்தும், கிடாய்வெட்டியும், உருவபொம்மைகள் வாங்கி வைத்தும் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு முனியப்பன் திருவீதி உலா நடந்தது. அதனையடுத்து நடைபெற்ற மறு பூஜையுடன் திருவிழா முடிவடைந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் இன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழாவையொட்டி அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டா் முரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story