திருவிழா கொடியேற்றம்
நாராயணசாமி கோவில் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியை அடுத்த கங்கணாங்குளம் அருகே உள்ள திருவிருத்தான்புள்ளி - வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவானது 12-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை மற்றும் தர்மம் நடைபெறும்.
8-ம் திருநாளான வருகிற 9-ந் தேதி அன்று மாலை அய்யா குதிரை வாகனத்தில் பவனி, 9-ஆம் திருநாளன்று அய்யா அனுமன் வாகனத்தில் பவனி, 10-ம் திருநாளன்று கருட வாகனத்திலும், 11-ஆம் திருநாளன்று அய்யா இந்திர வாகனத்திலும் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.
Related Tags :
Next Story