தேவகோட்டை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்


தேவகோட்டை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

தேவகோட்டை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் தொடக்கமாக நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தின் அருகில் விநாயகரும், சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். கொடி மரத்திற்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல் வைத்து பட்டாடை கட்டப்பட்டு ஒருமுக, பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூலம், நந்தி, சங்கு உருவம் பொறித்த கொடி வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. திருவிழாவில் நாள்தோறும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவும், 5-ம்நாள் திருக்கல்யாணமும் 9-ம் நாள் தேரோட்டமும், 11-ம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.


Next Story