புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்


புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

மதுரை

மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் பகுதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலய 42-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பாதிரியார் மகிழ்ச்சி மன்னன் திருவிழா கொடியை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றி விழாவை தொடங்கி வைத்தார். 27-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை வழிபாடு மற்றும் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மறையுரையாற்றி சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அன்பியங்களை சேர்ந்தவர்கள் நவநாள் திருப்பலி செய்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக 27-ந் தேதி மாலை திருவிழா சிறப்பு திருப்பலியும் அதனை தொடர்ந்து பாத்திமா அன்னையின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெறுகிறது. 28-ந்தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் பாத்திமா நகர் பகுதி இறை மக்கள் அன்பியங்கள், மகளிர் மன்றம், இளையோர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.


Next Story