புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா
காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.
காரமடை,செப்.18-
கோவை மாவட்டத்தில் வைஷ்ணவ தலங்களில் மிகவும் பிரசித்தி காரமடை அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.
இதை யொட்டி அதிகாலை 4 மணிக்கு மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் நாதஸ்வரம் மேள தாளங்கள் முழங்க வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உட்புறம் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து காலசாந்தி பூஜை நடைபெற்றது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், சுவாமி வேதவியாசர் ஸ்ரீதர் பட்டர், பாலாஜி ரங்காச்சாரியார், அர்ச்சகர்கள், கோவில் மிராசுதாரர் கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெறவும் வீட்டில் அன்னத்திற்கு எந்த குறையும் ஏற்படாமல் இருக்கவும் தாசர்களுக்கு காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை படையல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் தாசர்களிடம் இருந்து படைய லிட்ட தானியங்களை சிறிது தானமாக பெற்று வீட்டில் சமையல் செய்து முன்னோர்களுக்கு படைத்து வழிபட்டு விரதத்தை முடித்தனர்.