உடுமலையில், பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.


உடுமலையில், பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
x

உடுமலையில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

திருப்பூர்


உடுமலையில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

உடுமலை திருப்பதி கோவில்

உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகே உள்ள செங்குளத்தின் கரையையொட்டி இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடத்தில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று இந்த கோவிலில் ஸ்ரீ வேங்கடேச பெருமாளுக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சென்று வழிபட்டனர். காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் இருந்தது. மாலையில் கோவில் வளாகத்தில் கோவை அன்னூர் சண்முகம் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் பிருந்தாவனம் நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு பூஜை

இதேபோன்று புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.

இதுபோல் உடுமலைபிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சவுரிராஜபெருமாள் கோவில், தென்னைமரத்து வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரியகடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவில், ஏரிப்பாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஏழுமலையான் கோவில்

இது போல் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அடிவாரப் பகுதிக்கு கார், வேன், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருகை தந்தனர். பின்னர் பயபக்தியோடு சாமி பாடல்களை செல்போனில் கேட்டவாறு மலையேறி சென்று ஏழுமலையானுக்கு அவல், தேங்காய், பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர்.

பின்னர் திரும்பிச் செல்லும்போது மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் விளைந்த பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்ததை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழாவையொட்டி வனத்துறையினர் மற்றும் அமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே போன்று திருமூர்த்தி அணைக்கு அருகே மலைமீது உள்ள கரட்டு பெருமாள் கோயிலும் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.


Related Tags :
Next Story