அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
x

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது.

திருப்பூர்

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது.

ஆருத்ரா தரிசனம்

அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்ைம பெற்றதும், காசிக்கு நிகரான கோவில், முதலையுண்ட பாலகனை உயிருடன் மீட்டது என பல்வேறு சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடராஜப்பெருமான் சிவகாமி அம்மையாருக்கு 32 திரவியங்களால் அபிஷேகம் நடத்தி ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.

விழாவையொட்டி அம்மையப்பருக்கு அணிவிப்பதற்காக அவினாசியில் உள்ள பாபு மலர்நிலையத்தார் மூலம் மயில் இறகு, கல் ஆபரணம், பாக்குப்பூ, மரிக்கொழுந்து, விருச்சிப்பூ, சம்பங்கி, மனோரஞ்சிதம், செண்பகம், வில்வம், ரோஜா உள்ளிட்ட மலர்களால் மயிலிறகு பாவாடை, கிரீடம், நெத்தி அட்டி, ஒட்டியானம், குஞ்சிதபாதம் ஆகிய ஆபரணங்கள் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு அம்மையப்பருக்கு அணிவிக்கப்படுகிறது.

வாலீஸ்வரர் கோவில்

சேவூர் அறம்வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு சேவூர் அங்காளம்மன் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு திருவாதிரை நாச்சியார் சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன் கோவில் வீதி, ராஜவீதி, கோபி சாலை, வடக்கு வீதி ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்று வாலீஸ்வரர் கோவிலை அடைந்தது.விரதம் இருந்த பெண்கள் வீடுகளில் மஞ்சளில் விநாயகர் செய்து அருகம்புல் சாற்றி விபூதி சந்தனம் குங்குமம் இட்டு விநாயகர் முன், ஒரு தட்டில் மாங்கல்ய சரடுகள் வைக்கப்பட்டு, அரசாணிக்காய், பாகற்காய், அவரைக்காய் உள்ளிட்ட முக்கியமான 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டனர். அதன்பின் உள் கழுத்து சரடு எனும் மாங்கல்ய சரடை அணிந்து, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.


Related Tags :
Next Story