18 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்; இன்று நடக்கிறது

18 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் இன்று நடக்கிறது.
காய்ச்சல் கண்டறியும் முகாம்
திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) 18 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி பீமநகர் பகுதியில் காலை பக்காலி தெருவிலும், மாலை அடைக்கலமாதா கோவில் தெருவிலும், பீரங்கிகுளம் பகுதியில் காலை மேலகாசிபாளையம் தெருவிலும், மாலை தையல்கார தெருவிலும், இ.பி.ரோடு பகுதியில் காலை அண்ணாநகரிலும், மாலை விறகுப்பேட்டையிலும், எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் காலை சக்தி விநாயகர் கோவில் தெருவிலும், மாலை ஸ்டாலின்நகர் பகுதியிலும், காந்திபுரம் பகுதியில் காலை சுபானியபுரத்திலும், மாலை அண்ணாமலை நகரிலும், இருதயபுரம் பகுதியில் காலை சங்கிலியாண்டபுரம் பிச்சைநகர் அங்கன்வாடி மையத்திலும், மாலை சங்கிலியாண்டபுரம் முக்கிய அங்கன்வாடி மையத்திலும் நடக்கிறது.
மேலும் காமராஜ்நகர் பகுதியில் காலை பெலிக்கன் கோவில் தெருவிலும், மாலை டி.எஸ்.என். அவென்யூவிலும், காட்டூர் பகுதியில் காலை ஜெகநாதபுரத்திலும், மாலை ஸ்டாலின்நகரிலும், மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் காலை கொட்டப்பட்டு அங்கன்வாடி மையத்திலும், மாலை காமன்மேடை பகுதியிலும், பெரியமிளகுபாறை பகுதியில் காலை ராக்கின்ஸ் சாலையிலும், மாலை கோரிமேடு பகுதியிலும், ராமலிங்கநகர் பகுதியில் காலை குமரன்நகரிலும், மாலை சீனிவாச நகரிலும், ஸ்ரீரங்கம் பகுதியில் காலை கன்னியப்பன் தெருவிலும், மாலை கெரைக்கரை தெருவிலும் நடக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
இதேபோல் சுப்ரமணியபுரம் பகுதியில் காலை மன்னார்புரம் நடுத்தெருவிலும், மாலை மன்னார்புரம் வடக்குத்தெருவிலும், தெப்பக்குளம் பகுதியில் மலைக்கோட்டை மருந்தகத்திலும், மாலை மலைவாசலிலும், தென்னூரில் காலை காயிதே மில்லத் நகரிலும், மாலை சின்னசாமி நகரிலும், திருவெறும்பூர் பகுதியில் காலை காந்திநகரிலும், மாலை நவல்பட்டு ரோடு பகுதியிலும், திருவானைக்காவல் பகுதியில் காலை சங்கர்நகரிலும், மாலை மங்கம்மா நகரிலும், உறையூர் பகுதியில் காலை வண்டிக்கார தெருவிலும், மாலை பாக்குப்பேட்டை பகுதிகளிலும் அமைந்துள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






