நெய்வயல் கிராமத்தில் வயல் தின விழா
நெய்வயல் கிராமத்தில் வயல் தின விழா நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா நெய்வயல் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில் 124 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விதை நேர்த்தி முறைகள், அறுவடை பின்செய் தொழில்நுட்பம், உழவன் செயலி பதிவேற்றம், இடுபொருட்கள் முன்பதிவு, பண்ணைக் கருவிகள் தொகுப்பு, நெல் பருத்தியில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூல் பெறுதல் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
வேளாண்மை அலுவலர் வினோத்குமார், வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் சேது பாஸ்கரா, தொழில்நுட்ப மேலாளர் மகேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்னலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் திவாகர், உதவி தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். முடிவில் தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.