ஏனாதிமங்கலம் கிராமத்தில் வயல் விழா
ஏனாதிமங்கலம் கிராமத்தில் வயல் விழா நடைபெற்றது.
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் வயல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் முத்துமீனாட்சி தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன் முன்னிலை வகித்தார். கரும்பு அலுவலர் கோபிசிகாமணி வரவேற்றார். விழாவில் ஆலை அரவைப் பணிகள், அதிகளவில் கரும்புகளை நடவு செய்வது மற்றும் எந்திரம் மூலம் அறுவடை செய்வது தொடர்பாக கிராம விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஆலை அலுவலக பணியாளர்கள் கோபாலகிருஷ்ணன், டேவிட் ஜெயக்குமார், முல்லைவேந்தன், நிர்வாக உறுப்பினர் திருமால், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயன், சுதாகர், முன்னாடி விவசாயிகள் ரகோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, சவுந்தர், காசிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story