வயலை தயார்படுத்தும் பணி


வயலை தயார்படுத்தும் பணி
x

தஞ்சை அருகே 8-ம் நம்பர் கரம்பை பகுதியில் சம்பா சாகுபடி பணிக்காக வயலை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே 8-ம் நம்பர் கரம்பை பகுதியில் சம்பா சாகுபடி பணிக்காக வயலை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறுவை சாகுபடி பணிகள்

நடப்பாண்டு மேட்டூர் அணை வழக்கம் போல் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்தது. தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம் உள்பட பல பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் நடந்துள்ளது.

சம்பா சாகுபடி பணிக்காக மும்முரம்

இந்தநிலையில் தஞ்சை அருகே 8-ம் நம்பர் கரம்பை பகுதியில் குறுவை மேற்கொள்ளாத சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி பணியில் இறங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வயலை உழுது சமன்படுத்தி ஒரு போக சம்பா சாகுபடி பணிக்காக மும்முரம் காட்டி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் நாற்று நடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story