மணல் கொள்ளையை தடுக்க எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் - அரசு தரப்புக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மணல் கொள்ளையை தடுக்க எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் - அரசு தரப்புக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மணல் கொள்ளையை தடுக்க எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


ராமநாதபுரம் மாவட்டம் எம்.கரிசல்குளத்தை சேர்ந்த முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடலாடி மற்றும் வேப்பங்குளத்தில் பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 10 அடி ஆழம் வரை மணல் அள்ளுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு தாலுகா அளவிலும், மாவட்ட அளவிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் கூடுதல் நடவடிக்கை எடுத்தது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதம் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story