கோப்பு மகா மாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம்


கோப்பு மகா மாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம்
x

கோப்பு மகா மாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம்

திருச்சி

திருச்சியை அடுத்த கோப்பு கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த ஏப்ரல் 16-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. முன்னதாக காலையில் ஏராளமான பக்தர்கள் உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்திலிருந்து பால்குடம், தீர்த்த குடம், அலகு போட்டும், பறவைகாவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தேருக்கு முன்னால் பக்தர்கள் சிலர் ராமன், லட்சுமணன், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், அனுமன் உள்ளிட்ட பல தெய்வங்களின் வேடமிட்டு அணிவகுத்து சென்றனர். தேருக்கு பின் பகுதியில் ஏராளமான பெண்கள் அடிபிரதட்சனம் செய்தனர். அன்றிரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) கிடா வெட்டும் நிகழ்ச்சியும், இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் வீதிஉலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நாளை (வியாழக்கிழமை) இரவு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவுபெறுகிறது.


Next Story