போலீசார் உடல் பரிசோதனை நடத்திமருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சேலம் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவு


போலீசார் உடல் பரிசோதனை நடத்திமருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சேலம் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2023 1:33 AM IST (Updated: 10 July 2023 4:53 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் உடல் பரிசோதனை நடத்திமருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சேலம் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார்.

சேலம்

சேலம்

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அதில் மாவட்டத்தில் பணியாற்றும் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், போலீசார் மற்றும் அலுவலர்கள் அனைவரும் உடல் பரிசோதனை நடத்த வேண்டும். குறிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை பரிசோதனை நடத்த வேண்டும். இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை 3 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.


Next Story